தளபதி 64 படத்துடன் மோதப்போகும் சூர்யாவின் சூரரைப் போற்று!


மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படமான தளபதி 64 படத்தின் சூட்டிங், டில்லியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இவரைத் தவிர, ஆண்டனி வர்க்கீஸ், கவுரி கிஷன், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, பிரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீ நாத், மேத்யூ, அழகம் பெருமாள், சேத்தன், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். இந்தப் படம், அடுத்தாண்டு கோடை விடுமுறையின் போது ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகும் சூரரைப் போற்றுப் படமும், அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, இந்தப் படத்தின் முழு படபிடிப்பும் முடிந்து விட்டது. இந்த படத்தில், அபர்ணா பாலமுரளி, மோகன் பாபு, ஜாக்கி ஷெராஃப், கருணாஸ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளன

தற்போது, இந்தப் படத்தின் டப்பிங் பணிகள் முழு வேகத்தில் துவங்கி இருக்கின்றன. கடந்த 2011ல், சூர்யா நடிப்பில் உருவான 'ஏழம் அறிவு' மற்றும் விஜய் நடிப்பில் உருவான 'வேலாயுதம்' படங்கள் ஒரே நாளில் வெளியாகின.

இதற்கு முந்தைய படங்கள் தொடர்ந்து சூர்யாவுக்கு சரியாக செல்லவில்லை. காப்பான் படமும் சூர்யாவை காக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில், சூரரைப் போற்று திரைப்படம் சூர்யாவின் மார்க்கெட்டை மீண்டும் போற்ற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area