தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் இப்படம் கடந்த தீபாவளி ரிலீசாக வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, என்றாலும் விமர்சனரீதியாக படம் அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை.
இப்படத்தின் வசூல் ரூ 200 கோடியை தாண்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரும் விநியோகிஸ்தருமான கே.ராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் அதிர்ச்சிக்குரிய தகவல்களை கூறியுள்ளார்.
பிகில் நல்ல வசூல்னு யார் சொன்னது? பத்திரிகையாளர்கள் ரூ 250 கோடி வசூல் ரூ 300 கோடி வசூல்னு சொன்னா உண்மையாகிடுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
தயாரிப்பாளர் அவஸ்தபட்டு இருக்காரு.. அந்த வலி அவருக்கு தான் தெரியும். விஜய் நடிச்சதால 4 நாள் நல்லா போச்சு.. ஐந்தாவது நாளே படம் படுத்துடுச்சி. இப்போ பிகில் ஓடுன தியேட்டர்ல எல்லாம் கைதி தான் ஓடிட்டு இருக்கு என கூறியுள்ளார்.
மேலும் கைதி தமிழ் சினிமாவில் வழக்கமாக இடம் பெறும் எந்தவொரு ஜிகினா வேலையும் இல்லாத படம். போட்ட பணத்தை விட இரட்டிப்பு லாபம் பெற்றுள்ளது என கூறியுள்ளார்.