கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் மீண்டும் சீயான் விக்ரம்!

November 08, 2019

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பட நிறுவன தயாரிப்பில் சீயான் விக்ரம் நடித்து இருந்த திரைப்படம் கடாரம் கொண்டான். இந்த படத்தை ராஜேஷ்.எம்.செல்வா இயக்கி இருந்தார். இப்படத்தில் விக்ரமின் தோற்றமும் நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் விக்ரம் மீண்டும் கமல் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படம் கமலின் கனவு படமான மருதநாயகமாக இருக்க அதிக வாய்ப்புள்ளதாம். கமல் தற்போது அரசியலில் பிசியாக இருப்பதால் அப்படத்தில் நடிக்க முடியாத சூழல் இருக்கிறதாம். ஆதலால் மருதநாயகத்தில் விக்ரம் நடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை கமல் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .

1997ம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதிதான் மருதநாயகம் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கின.18ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த முகமது யூசுஃப் கான் குறித்த திரைப்படம்தான் இது.

எம்.ஜி.ஆர் ஃபிலிம் சிட்டியில் நடந்த படப்பிடிப்பில் இங்கிலாந்து ராணி எலிசபெத் கலந்து கொண்டார். ஏறத்தாழ 20 நிமிடங்கள் படப்பிடிப்பு தளத்தில் இருந்தார். இதன் காரணமாக சர்வதேச கவனம் அந்த திரைப்படத்தின் மீது குவிந்தது.

மருதநாயகம் திரைப்படத்தைத் தயாரிக்க ஐம்பது கோடிக்கும் அதிகமான பணம் தேவைப்பட்டது என்கிறார்கள் சினிமா விமர்சகர்கள். அப்போதைய காலகட்டத்தில் அந்த தொகையைத் திரட்ட முடியாத காரணத்தினால்தான் படம் கைவிடப்பட்டது. 

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »