மருதநாயகம் விரைவில் வரும் ,கமலின் அசத்தல் பதில் !

November 07, 2019

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்  கமல்.கமல்ஹாசனிடம் அவரது கனவு திரைப்படமான மருதநாயகம் குறித்து கேள்வியெழுப்பியபோது .இந்த நிலையில் மருதநாயகம் படத்தில் நடிக்க மாட்டேன் என்று கமல்ஹாசன் தற்போது பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “மருதநாயகம் படம் தயாராகும். எனக்கு அரசியல் பணிகள் இருப்பதால் மருதநாயகம் படத்தில் நான் இருக்க மாட்டேன். எனக்கு பதில் வேறு ஒரு நடிகர் இருப்பார்” என்றார். யார் அந்த நடிகர் ?

இதன்மூலம் மருதநாயகம் படத்தில் இருந்து விலகுவதை கமல்ஹாசன் உறுதிப்படுத்தி உள்ளார். வேறு நடிகரை வைத்து பட வேலைகள் தொடங்கப்படும் என்று தெரிகிறது. கமலுக்கு பதில் விக்ரம் நடிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடாரம் கொண்டான் படத்தில் விக்ரம் நடிப்பை கமல்ஹாசன் பெரிய அளவில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் கனவு படமான மருதநாயகம் படவேலைகள் 1997-ல் தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் நிறுத்தப்பட்டது. பட்ஜெட் மற்றும் சர்வதேச அளவிலான வினியோக சந்தை நிலவரம் உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பை தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டது.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »