கட் அவுட்டை அகற்ற கூறி உத்தரவு !

May 30, 2019
கட் அவுட்டை அகற்ற கூறி உத்தரவு ! மனவேதனையில் சூர்யா ரசிகர்கள்!!

சூர்யா நடித்த NGK நாளை மே 31ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் திருத்தணி அருகே சூர்யா ரசிகர்கள் 215 அடி பிரம்மாண்ட கட் அவுட் ஒன்றை வைத்திருந்தனர். மேலும் இதுவரை எந்த நடிகர்களுக்குமே இப்படி ஒரு கட்அவுட் வைக்காத நிலையில் இதனால் சூர்யா ரசிகர்கள் பெருமிதத்துடன் இருந்துள்ளனர் இதனை சூர்யா ரசிகர் மன்றத் தலைவரான திருத்தணி ஏடி ராஜ்குமார் என்பவர் 6.50 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஒரு மாதமாக ஏற்பாடு செய்தார்.

இந்நிலையில் இந்த கட் அவுட் வைக்க முறையான அனுமதி பெறவில்லை என்று கூறி அதனை உடனே அகற்ற நகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார், அதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் தலைமையில் ஊழியர்கள் கட் அவுட்டை அகற்றினர். இதனால் ரசிகர்கள் பெரும் மனவேதனை அடைந்துள்ளனர்.இப்படத்தை டி. ஆர்.பிரகாஷ்பாபு மற்றும் டி. ஆர் பிரபு ஆகியோரின் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் நடிகை ராகுல் பிரீத் சிங் சாய்பல்லவி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செல்வராகவன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »