இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது!

May 31, 2019

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் "இந்தியன்".இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சங்கர் தற்போது மீண்டும் அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவெடுத்தார். 

ஆனால் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், செட்டாகாத மேக்கப் என இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து தள்ளி போய் கொண்டே இருக்கிறது.சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகி கமலின் ஒப்பனை சரியில்லாததால் பாதியில் நின்றது.இந்த படத்தின் செலவுகள் அதிகமாக இருப்பதால் இந்த படத்தில் இருந்து லைக்கா நிறுவனம் பின்வாங்கியது.

தற்போது இந்த படத்தை தயாரிக்கமாறு சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் அணுகியுள்ளார் ஷங்கர்.இந்த படத்தை அவர்களும் தயாரிக்க மறுத்து விட்டார்களாம்.மேலும் இந்தியன் 2 படம் டிராப் என்றும் இப்படத்தை இந்தியில் எடுக்க ஷங்கர் திட்டமிட்டிருப்பதாகவும் வதந்திகள் பரப்பப்பட்டது.ஆனால் இப்படம் drop ஆகவில்லையாம் கூடிய விரைவில் இதன் படப்பிடிப்பு சென்னையில் துவங்க உள்ளதாம்.

ஏற்கனவே படத்திற்காக சென்னை கோகுலம் ஸ்டுடியோஸில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டு இருந்த அரங்கத்திலேயே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »