யார் இந்த நேசமணி? டிவிட்டரில் எப்படி டிரெண்டானது!

May 30, 2019

இந்திய அளவில் டிவிட்டரில் தற்போது டிரெண்டிங்கில் இருப்பது #Neasamani. யார் இந்த நேசமணி டிவிட்டரில் டிரெண்டானது எப்படி என்று பாப்போம். பிரெண்ட்ஸ் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலுவின் நேசமணி கேரக்டரை வைத்து நெட்டிசன்கள் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து அதகளம் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக்கில் உள்ள Civil Engineers Learners என்ற பக்கத்தில் சுத்தியல் ஒன்றின் படத்தினை பதிவு செய்து இதை உங்கள் நாட்டில் எப்படி அழைப்பீர்கள் எனக் கேட்கப்பட்டிருந்தது.

இதற்கு விக்னேஷ் பிரபாகர் என்பவர் "இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். ஜமீன் பங்களாவில் வேலை பார்க்கும்போது பெயிண்ட்டிங் கான்ட்ராக்டர் நேசமணியின் தலையை அவரது அண்ணன் மகன் இதை வைத்து உடைத்துவிட்டார். பாவம்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரை தொடர்ந்து மற்றவர்கள் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' , Neasamani எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இந்த ஹாஷ்டாக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ளது.

டிவிட்டரில் டிரெண்டிங்கில் உள்ள நேசமணி வேறுயாரும் இல்லை அவர் 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைபுயல் வடிவேலுவே ஆவார்.

நேசமணி என்ற கதாபாத்திரம் விஜய் மற்றும் சூர்யா நடிப்பில் வெளிவந்த 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் பெயர் ஆகும். அந்தப் படத்தில் பெயிண்ட்டிங் காண்ட்ராக்டராக வரும் வடிவேலு, ஜமீன் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கச் சென்று பல லூட்டிகளை அடித்திருப்பார். இதைக்கொண்டு தற்போது ட்ரெண்ட் ஆக்கியுள்ளனர்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »