அஜித்துக்கு ஜோடியாகும் வித்யா பாலன் !!!


தல அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தில் நடித்து உள்ளார்.வரும் ஜனவரி 10-ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து தீரன் பட இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பாலிவுட் படமான(பிங்க்)ரீமேக் படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. சிம்புவின் AAA பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த படத்தில் நஸ்ரியா, கல்யாணி, ஷர்த்தா ஸ்ரீநாத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.பிரபல பத்திரிகையாளரான ரங்கராஜ் பாண்டே இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.தற்போது இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகையான வித்யா பாலன் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக  தகவல்கள் கிடைத்துள்ளன.ஆனால் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம் ...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area