சீமானை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள் !!!

January 06, 2019

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், நடிகர், இயக்குனர் சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் தளபதி  விஜய்யை கடுமையாக விமர்சித்தது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 

அதாவது சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் பணிந்து  சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக கூறவேண்டும். அதை விடுத்தது முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் என கூறுவது எல்லாம் அவமானம்.

எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்… உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?…இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்…. சிம்பு தான் என் தம்பி. அவனை வச்சு 4 படம் எடுக்க போறேன். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என மோசமாக விமர்சனம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தளபதி ரசிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ்டேக்கை போட்டு இந்திய அளவில் ட்ரெண்ட் அடித்து  வருகின்றனர். 
இந்த ஹேஸ்டேட் தற்போது டிவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது.சீமான் சார் இது தேவையா !!! தளபதியுடன் மோதலாமா  !!! 

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »