ரசிகர்கள் எதிர்பார்த்த "தளபதி 63" படத்தின் பூஜை இன்று நடந்தது.

சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் 63 ஆவது படத்திற்கு தயாராகியுள்ளார். தெறி மற்றும் மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து 3 ஆவது முறையாக இயக்குனர் அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடிக்கிறார்.
இது விஜய்க்கு 63 வது படமாகும். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். தளபதி 63 படத்தின் பூஜை இன்று நடந்தது. இதில் விஜய், அட்லி உள்பட படக்குழுவினர் பங்கேற்றனர். இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது. இதற்காக சென்னை பின்னி மில்லில் அரங்கு அமைத்துள்ளனர். நடிகர் விஜய் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.இந்த படம் விளையாட்டுத் துறையில் நடக்கும் ஊழல்கள், சாதி ரீதியான பாரபட்சம், போன்றவற்றை மையப்படுத்தி உருவாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.


ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்(கல்பாத்தி எஸ் அகோரம்) தயாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். வில்லு படத்தைத் தொடர்ந்து விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா இப்படத்தில் நடிக்கிறார்.மேலும், கதிர், விவேக், ரோபோ சங்கரின் மகள் இந்திரஜா, யோகி பாபு ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனல் அரசு இப்படத்திற்கு சண்டை காட்சிகள் அளிக்கிறார். ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area