வசூலில் இறுதியில் வெல்லப்போவது பேட்டயா? விஸ்வாசமா ?

January 20, 2019
வசூலில் இறுதியில் வெல்லப்போவது பேட்டயா? விஸ்வாசமா ? பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட விவரம் !!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் தல அஜித்தின் விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் பொங்கல் விருந்தாக ஜனவரி 10-ம் தேதி வெளியானது.பேட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

தமிழகத்தின் பேட்ட படத்தின் வசூலை விட விஸ்வாசம் படத்திற்கு அதிகம் எனவும் சில விநியோகிஸ்தர்கள் கூறி வருகின்றனர். இது உண்மையான வசூல் விவரமா இல்லை பொய்யானதா என்று பார்ப்போம் 


ரஜினியின் பேட்ட படத்தின் வசூல் ரூ.100 கோடி என அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் சன்பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. உடனே விஸ்வாசம் படத்தின் வசூலும் இதுவரை ரூ. 125 கோடிகளை கடந்துவிட்டதாக படத்தின் தமிழக உரிமையை பெற்றிருக்கும் KJR ஸ்டியோஸ் அறிவித்துள்ளது.இந்த போட்டி தயாரிப்பாளர்கள் மட்டும் இல்லாமல் ரசிகர்களிடமும் கலகத்தை உண்டாகிவருகிறது.


இந்நிலையில் பிரபல விநியோகிஸ்தர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பாக பரவி வருகிறது.பேட்ட படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை சேர்ந்த பிரபலமான செண்பகமூர்த்தி என்பவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இறுதியில் ஜெயிக்க போவது எது என்று கூறியுள்ளார்.பேட்ட, விஸ்வாசம் என இரண்டு படங்களுமே நல்ல வசூல் செய்து வருகின்றன. ஆனால் இறுதியில் பேட்ட படம் தான் வசூல் ரீதியாக ஜெயிக்கும்.


சூப்பர்ஸ்டாரின் ரஜினிகாந்தின் "பேட்ட" படம் கடைசிவரை நின்னு பேசும் என்று தெரிவித்தார் . இதுவரை நாங்கள் ரிலீஸ் செய்ததிலேயே பேட்ட தான் அதிகம் வசூல் செய்த படம் எனவும் கூறியுள்ளார்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »