வெளிநாடுகளில் வசூல் வேட்டையாடிய பேட்ட !!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான படம் பேட்ட. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிக்குமார், சிம்ரன், திரிஷா, மேகா ஆகாஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் நடித்திருந்தனர்.மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகரான நவாஸூதின் சித்திகி மிரட்டலான வில்லன் வேடத்தில் நடித்திருந்தார்.


இந்த படத்தில் மீண்டும் பழைய ஸ்டைலான மாஸ்ஸான ரஜினியை பார்க்க முடிந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர்.திரையரங்குகளில் இந்த படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலயைில் இந்த படம் இந்தியா தவிர பிற நாடுகளில் பேட்ட திரைப்படத்தின் வசூல் நிலவரத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள காணொளிக் காட்சியில் மாலிக் என்ற வெளிநாட்டு விநியோகிஸ்தர் பேசுகிறார். அவர் தெரிவித்ததாவது, பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 


அதனால் விநியோகஸ்தர்கள் எல்லாம் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். பேட்ட படத்தின் வசூல் 17 ஆம் தேதி வரை வெளிநாடுகளில் மட்டும் இந்திய ரூபாய்  மதிப்பில் ரூ.65 கோடியை வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கக் கூடும். விரைவில் இது பற்றி விரைவில்  அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.

இன்றுடன் வெளிநாடுகளில் மட்டும் பேட்ட படத்தின் மொத்த வசூல் 72 கோடியாகும். இந்த வசூல் வரும் நாட்களில் இன்னும் இருமடங்காக ஆக வாய்ப்புள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area