பேட்ட படத்திற்கு வசூலில் முதலிடம் ! வெளியான 5 படங்களில்...

January 14, 2019

கார்த்திக்சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் பேட்ட இந்த படித்தால் ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் சிம்ரன் நடித்துள்ளனர் முக்கியகதாபாத்திரத்தில் சசிகுமார் ,விஜய்சேதுபதி நடித்துள்ளனர்.


இந்த படத்துடன் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் ,நயன்தாரா இணைந்து நடித்துள்ள விஸ்வாசம் படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் பேட்ட படத்திற்கு விமர்சனரீதியாக அதிக வரவேற்பு கிடைத்தது. அதுமட்டும்மல்லாமல் முதல் நாள் வசூலில் விஸ்வாசத்தை பேட்ட பின்னுக்கு தள்ளியது. பேட்ட வெளியாகி மூன்று நாட்களுக்குள் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. விஸ்வாசம் படத்தின் முதல் மூன்று நாட்களின்  வசூல்  90 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.


இதுமட்டுமல்லாமல் பேட்ட படம் உலகமுழுவதிலும் வெளியானதால் பிற மொழி படங்களும் இதனுடன் வெளியானது (அதாவது ராமச்சரன் நடித்த VVR படமும் , பால கிருஷ்ணா நடிப்பில் NTR வாழ்கை வரலாறு படமும், வெங்கடேஷ் நடிப்பில் F2 படமும் வெளியானது) "VVR" விமர்சன ரீதியாக தோல்வி அடைந்தது மற்ற இரு படங்கள் ஓரளவிற்கு விமர்சனரீதியாக தேறியது .அதனால்  பேட்ட படத்திற்கு அணைத்து இடத்திலும் அமோக வெற்றி பெற்று இன்று வரை அரங்கம் நிறைந்த கட்சிகளுடன் பேட்ட படத்தின் வெற்றிப்பயணம் தொடர்கிறது.

இன்று வரை பேட்ட படத்தின் முழு வசூல் 116 கோடியாகும் பொங்கல் விடுமுறை என்பதால் இதன் வசூல் இன்னும் இரண்டு மடங்கு அதிகமாக வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »