விஜய் 63 படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது !!!

January 02, 2019

வெற்றிக்கூட்டணியான நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் அட்லீ இணையும் புதிய படம் 'விஜய் 63',இந்த படம் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை களம் அதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஏனென்றால் விளையாட்டை மையமாக கொண்ட கதைகளான (பாலிவுட்) 'தங்கள்' மற்றும் 'சக்குதே இந்தியா' ஆகிய படங்கள் விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும்   மாபெரும் வெற்றி அடைந்தது.
இந்த படத்தை AGS நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரிக்கவுள்ளது.இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

புதிய தகவல் விஜயின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது !!!

இந்த படத்தில் விஜய் கோச்சாராக நடிக்க உள்ளாராம்.அதற்காக விஜய் சிக்ஸ் பேக் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் இது கால் பந்து விளையாட்டை மையமாக கொண்ட படமாக உருவாக இருப்பதாகவும் இந்த படத்தில் மொத்தம் 16 இளம் பெண் நடிகைகள் அறிமுகமாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.இப்படத்தின் படப்பிடிப்புகள் இம்மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் கூடுதல்தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இப்படத்தின் அறிவிப்பு வெளியாகும் போதே தீபாவளி ரிலீஸ் என அறிவித்து விட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Poster Design : Fans Express

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »