ராஜமவுலி படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.

January 03, 2019

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி தெலுங்கு திரையுலகை உலகத்தரத்திற்கு உயர்த்தியவர் அவர் இயக்கிய அணைத்து படங்களும் வசூல்ரீதியாகவும் ,விமர்சனரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தவைகள்.பாஹூபலி 2 ஆம் பாகம் உலகம் முழுவதும் 1000 கோடி வரை வசூல் சாதனை படைத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம் சரணை வைத்து RRR படம் இயக்கி வரும் ராஜமவுலி, அடுத்த படம் குறித்த கதை தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.


அடுத்த படத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட ராஜமவுலியிடம் நீங்கள் தமிழ் நடிகர்களை வைத்து படம் இயக்குவதாக இருந்தால் உங்கள் தேர்வு ரஜினியா இல்லை கமலா? என கேள்வி கேட்கப்பட்டது.


அதற்கு ராஜமவுலி “நான் ரஜினியை வைத்துதான் படம் இயக்குவேன். நான் அவருடன் இணையும் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சிக்கும் ரசிகர்களின் விசில் பறக்கும்” என்று பதில் அளித்துள்ளார். இதனால், ரஜினிகாந்த் ராஜமவுலி இயக்கத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்...  

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »