ட்விட்டரில் முதல் இடம் பிடித்த விஸ்வாசம் படம்!

November 13, 2019
தங்கள் ரசிகர் பட்டாளத்தின் வலிமை என்னவென்று உலகிற்கு நிருபித்து கட்டிய அஜித் ரசிகர்கள் !

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் வெளியான படம் விஸ்வாசம். இந்த படத்திற்கு  ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்தது. 2019ஆம் ஆண்டு ட்விட்டரில் நிகழ்ந்த செல்வாக்குமிக்க தருணங்களில் தல அஜித் நடித்த விஸ்வாசம் படம் குறித்து பதிவுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

சமூக வலைதளமான ட்விட்டர் இந்த ஆண்டில் நிகழ்ந்த செல்வாக்கு மிகுந்த டாப் தருணங்களைப் பட்டியலிட்டுள்ளது. இதில் தல அஜித் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான விஸ்வாசம் திரைப்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

படத்தின் அறிவிப்பு தொடங்கி, ஃபர்ஸ்ட் லுக், ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில், டீசர், ட்ரெய்லர் என ஒவ்வொரு அப்டேட்டையும் #Viswasam என்ற ஹேஷ்டாக்கில் இந்தியா முழுவதும் பரவச் செய்து ட்ரெண்டாக்கிய ரசிகர்கள், இணையத்தை தெறிக்கவிட்டனர். 

இதனால் விசுவாசம் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அஜித் ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளது. மேலும் இவ்வருடம் வலிமை ஹேஸ்டேக் முதலிடம் பிடிக்கும் எனவும் கூறியுள்ளது.

இதோ ட்விட்டர் லிஸ்டில் சத்யஜோதோ பிலிம்ஸ் நிறுவனத்தின் டீவீட்டும்:

கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்து திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும் அதிலுள்ள நடிகர்களையும் தாண்டி, சிறப்பான பப்ளிசிட்டிதான் அந்தப் படத்தை மூலை முடுக்குகளில் இருப்பவர்களிடத்திலும் சென்று சேர்த்து பார்க்கவைக்கிறது.

தற்போது சமூக வலைதளங்களின் வரவால் ரசிகர்களே தங்களுக்கு விருப்பமான நடிகர்களின் படம் அறிவிப்பில் தொடங்கி, ஒவ்வொரு விஷயத்தையும் அப்டேட்டாக பதிவிட்டு படம் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றனர்.   

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »