மிரட்டல் ட்விட் போட்ட விவேக் ! உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் !


நடிகர் விஜய் மற்றும் அட்லீ கூட்டணி என்றாலே ரசிகர்களுக்கு விருந்து காத்துகொண்டிருக்கிறது என்று தான் அர்த்தம்.அப்படி விருந்து படைப்பவர்கள் இணைந்துள்ளனர்.இந்த படத்தினை விஜய் 63 என்றே கூறி வருகின்றனர்.படம் தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் படத்தின் வேலைகள் எல்லாம் மும்முரமாக நடந்து வருகிறது.அனால் படம் பற்றிய எந்த தகவலுமே தெரியவில்லை.
இந்நிலையில் நடிகர்  ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து கொண்டிருந்தார்.அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த போது என்னுடைய அடுத்த படம் விஜய் 63,முழுவதும் மிரட்டலாக உள்ளது.என்று தெரிவித்தார்.நடிகர் விவேக்கின் இந்த ட்விட்டை கண்டு விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனராம்.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.இவர்களுடன் கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், டேனியல் பாலாஜி, விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், இந்தப் படத்தில் விஜய்யுடன் 12-வது முறையாக நடிகர் விவேக் இணைந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area