கடாரம் கொண்டான் எப்போ ரிலீஸ்?



கமலஹாசன்  தயாரிப்பில அவரோட உதவியாளர் ராஜேஷ் செல்வா இயக்குற படம் கடாரம் கொண்டான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிஞ்சு பின் தயாரிப்பு வேலைகள்ல பிஸியா இருக்குபடக்குழு .மேலும் எல்லா வேலைகளும் முடிஞ்சு மே 31-ம் தேதி இந்த படம் வெளியாகும்னும் எதிர்பார்க்கப்பட்டுச்சு.

ஆனா சில காரணங்களால இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது தற்போது கிடைத்திருக்கும் புதிய தகவலின் படி இப்படத்தின் அனைத்து பணிகளும் 90 சதவிதம் முடிவடைந்துள்ளது.

இதைத் தொடர்ந்து படம் ஜூன் 28-ஆம் தேதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.


இந்த படத்தில் விக்ரம் முன்னனி கதாபாத்திரத்தில் நடிக்கிரார். அவருடன் நாசரின் மகன் இளம் ஹிரோவாகவும், கமலின் இளைய மகள் அக்ஷராஹாசன் இளம் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கடைசி நாள் படப்பிடிப்பிற்கு திடீர் என நடிகர் கமல் விசிட் செய்தார்.  படப்பிடிப்பு பற்றி இயக்குனர் மற்றும் விக்ரமிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மேலும் குறித்த நேரத்தில் படத்தை முடித்து கொடுத்த ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் கமல் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த படம் விக்ரம் ரசிகர்களுக்கு மிகபெரிய ட்ரீட்டாக அமையும் என அவர் குறிப்பிட்டார்.இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாக உள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area