ஐஸ்வர்யா ராய் உறுதிப்படுத்தியுள்ளார் !

May 25, 2019
பொன்னியின் செல்வன் பற்றி உறுதிப்படுத்தியுள்ளார் ஐஸ்வர்யா ராய் !

பொன்னியின் செல்வன் புதினம் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்றுப் புதினம்; என்றாலும் பொன்னியின் செல்வன் நிகழும் காலக்கட்டத்தில் வாழ்ந்த நிகழ்காலக் வரலாற்றுக் கதாப்பாத்திரங்களைச் சுற்றி சுழல்வதாக அமைந்தது. இந்த புதினத்தை படமாக மணிரத்தினம் இயக்கவுள்ளார் .10ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் அரசனாகி ஆட்சி அமைப்பது பற்றிய பொன்னியின் செல்வன் கதையில், சோழ ராஜ்ஜியத்தின் அமைச்சரவையில் இருக்கக் கூடிய முக்கிய மந்திரிகளில் ஒருவர் பெரிய பழுவேட்டறையர். அவரது மனைவியான நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாக தகவல்.


இந்த தகவலை நடிகை ஐஸ்வர்யா ராய் தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் .மணிரத்னம் இயக்கிய ‘இருவர்’, ‘குரு’, ‘ராவணன்’ ஆகிய திரைப்படங்களில் ஐஸ்வர்யா ராய் பணியாற்றியுள்ளார். தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாகவிருக்கும் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி படமாக்கப்படவுள்ள திரைப்படத்தில் மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருக்கிறார்.


‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் உருவாகவிருப்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், சமீபத்தில் சர்வதேச திரைப்பட விழாவான கேன்ஸ் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராய் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். சிவப்பு கம்பள வரவேற்பில் ராஜநடை போட்ட ஐஸ்வர்யா ராய், அதையடுத்து அளித்த பேட்டி ஒன்றில், மீண்டும் எனது குரு மணிரத்னம் உடன் பணியாற்றவிருப்பதில் மிகவும் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் உள்ளதாக தெரிவித்தார்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »