காப்பான் படத்தின் டீசர் எப்போது வெளியாகிறது?

April 12, 2019

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘காப்பான்’. சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹீரோயினாக சயீஷா நடித்துள்ளார்.இந்தப் படத்தில் மோகன்லால் இந்தியாவின் பிரதமராகவும், அவரின் பாதுகாப்புக்கு இருக்கும் உயர் போலீஸ் அதிகாரியாக சூர்யாவும் நடிக்கின்றனர் என ஏற்கெனவே செய்திகள் வெளியாகின. ஆனால், இதுகுறித்து படக்குழு மறுக்கவோ, உறுதிப்படுத்தவோ இல்லை.இந்நிலையில், மோகன்லால் மற்றும் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்து உறுதி செய்துள்ளார் சூர்யா.

மோகன்லாலின் முகநூல் பக்கத்தில், அவருடைய நேர்காணல் லைவ்வாக ஒளிபரப்பானது. அதில், வீடியோ கால் மூலம் சூர்யா பேசினார். அப்போது ‘காப்பான்’ குறித்து ஏதாவது பகிர்ந்து கொள்ளும்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த சூர்யா, ‘இது ஏற்கெனவே ஊடகங்களில் வெளியான செய்திதான். அதை இப்போது நான் உறுதி செய்கிறேன். மோகன்லால் சார் பிரதமராகவும், நான் அவரைப் பாதுகாக்கும் எஸ்பிஜி (Special Production Group) அதிகாரியாக நானும் நடிக்கிறேன்’ என்று தெரிவித்தார்.சமீபத்தில் தான் இப்படத்திற்காக ஒரு பிரம்மாண்டமான ரயில் சண்டைக் காட்சியை படக்குழு படமாக்கி முடித்தனர்.

இதைத்தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த், வரும் ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக காப்பான் பட அப்டேட் வெளிவரும் என்று கூறியிருந்தார்.இது என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில் அது என்னவென்ற தகவல் தற்போது நமக்கு கிடைத்திருக்கிறது.
அதாவது காப்பான் படத்தின் டீசர்தான் தமிழ் புத்தாண்டில் வெளியாகிறதாம். இதற்கான பணிகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறதாம்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »