
மக்கள்செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் தியாகராஜ குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படம் இந்த படம் ஆரண்ய காண்டம் திரைப்படத்திற்கு பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கம் அடுத்த படமாகும்.
இப்படத்தில் விஜய்சேதுபதி,சமந்தா,ஃபஹத் பாசில், மிஷ்கின், காயத்ரி, பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடிக்கிறார்,இதனால் இந்த ஆண்டு எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் இதுவும் ஒன்றாகும்.
இந்த படத்தை பற்றிய சுவாரசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அது என்ன வென்றால் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் பற்றி தெரிவித்தார்.அவர் தெரிவித்ததாவது ரம்யா கிருஷ்ணன் இந்த படத்தில் ஆபாச நடிகையாக நடித்திருப்பதாகவும்,முதலில் இந்த ரோலில் முன்னனி நடிகை நதியா நடிப்பதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.பாதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் சில காரணங்களால் இப்படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக தெரிகிறது. இதனால் இந்த கதாபாத்திரத்தில் ரம்யாகிருஷ்ணன் நடித்துவருக்கிறார்.
மேலும் இந்த படம் கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமியின் பின்னணியின் கதை என கூறப்படுகிறது.எந்த கதாபாத்திறமாக இருந்தாலும் அதை தத்ரூபமாக நடித்து கொடுப்பவர் ரம்யா கிருஷ்ணன். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே தமிழ் நாட்டில் இருக்கிறது. இதனால் இந்த படத்தின் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.