சன் பிச்சர்ஸ் வெளியிட்ட பேட்ட படத்தின் வசூல் விவரம்!


கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படமும், சிவா இயக்கத்தில் அஜித் நடித்த 'விஸ்வாசம்' படமும் பொங்கல் ஸ்பெஷலாக ஒரே நாளில் வெளியானது.

இதில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் தமிழகத்தில் வசூலில் முந்தியுள்ளது என்று பொய்யாக சில பத்திரிக்கைகள்  மற்றும் டிரேட் நிபுணர்கள் பொய்யான வதந்திகளை பரப்பி வந்தனர் அதை பொய்யாக்கும் வகையில் பேட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் இன்று உண்மையன வசூல் விவரத்தை ஒரு காணொளி கட்சி மூலம் வெளியிட்டது.


அதில் விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்ட படத்தின் உண்மையான வசூல் விவரத்தை வெளியிட்டர். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்ததாவது, "இந்த படத்தை பொறுத்தவரை வரும் ஞாயிற்றுகிழமை அன்று தமிழ் நாட்டில் மட்டும் வசூலில் 100 கோடியை கடக்கும் என்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். அதோடு 11 நாட்களில் தமிழ்நாட்டில்  100 கோடி வசூல் செய்யும் முதல் தமிழ் படம் இதுவே என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் ,அதோடு இந்த படம்  சினிமா விநியோகஸ்தர்கள் மட்டுமல்லாமல் மக்களையும் திருப்த்திப்படுத்தும் வகையில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்துள்ளது "
இவ்வாறு அவர் காணொளிக் கட்சியில் தெரிவித்துள்ளார்.

பேட்ட படம் ரிலீஸான 6 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.70.68 கோடி என்பது குறிப்பிடத்தக்கது..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area