"தளபதி 63" படத்தில் அடுத்து இணையவிருக்கும் நாயகிகள்! யார் ?


தளபதி விஜய் நடிப்பில் அட்லி  இயக்கவுள்ள 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்கவுள்ள நிலையில் புதிதாக 'பரியேறும் பெருமாள்' கதிர், யோகிபாபு, விவேக் ஆகியோர் சமீபத்தில் இந்த படத்தில் இணைந்தனர்.

இந்த படத்திற்கு கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளார் .அட்லி  படம் என்றாலே இரண்டு அல்லது மூன்று ஹீரோயின்கள் இருப்பது வழக்கம் அந்த வகையில்  இந்த படத்திற்கு இன்னும் ஒன்று அல்லது இரண்டு
கதாநாயகிகள் இணைய வாய்ப்புள்ளது.
அந்த வகையில் இந்த படத்தில் நடிகை கீர்த்திசுரேஷும் ,நடிகை ஆத்மிகாவும்   இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல்  இந்த படத்தில் மொத்தம் 16 இளம் பெண் நடிகைகள் அறிமுகமாக இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. 

இந்த செய்தி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருப்போம்....
இந்த படம் கால் பந்து விளையாட்டை மையமாக கொண்ட கதை களம் அதனால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த படத்தில் விஜய் கோச்சாராக நடிக்க உள்ளாராம். அதற்காக விஜய் சிக்ஸ் பேக் வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தை AGS நிறுவனம் அதிக பொருட்ச்செலவில் தயாரிக்க உள்ளது. ஏ.ஆர். ரஹமான் படத்திற்கு இசை அமைக்கவுள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area