தளபதி 63 : இதுவும் சுட்ட கதையா ? இப்பயே பைசல் பண்ணுங்க அட்லீ சார்.


தளபதி படம் என்றாலே  படம் முடிந்து திரைக்கு வரும் தருவாயில் சர்ச்சை கிளம்புவதும் அதை படக்குழுவினர் சரி செய்து பிறகு திரைக்கு வருவதும் வழக்கமாக உள்ளது,போன வருடம் கூட சர்கார் கதை திருட்டு விவகாரம் ஏற்பட்டு அந்த படம் திரைக்கு வருவதற்குள் பல சிக்கல் ஏற்பட்டது .

இதை தொடர்ந்து நடிகர் விஜய் தற்பொழுது அட்லீ இயக்கத்தில் (விஜய் 63) ஒரு படத்தில் நடிக்கிறார் அந்த படத்தின் கதை என்னுடைய கதை என்று வந்து நிக்கிறாராம் ஒரு இயக்குனர். யாரோ அவர் ?

AGS நிறுவனம் தயாரிக்க உள்ள விஜய் 63 படத்தின் படப்பிடிப்புகள் இந்த மாத இறுதியில் தொடங்க இருப்பதாக தகவல்கள் கிடைத்திருந்தன.இந்நிலையில் தற்போது குறும்பட இயக்குனர் ஒருவர் அட்லீயை சந்தித்து நீங்கள் இயக்க இருப்பதாக கூறப்படும் கதை என்னுடைய குறும்படதின் கதை  போலவே இருப்பதாக கேள்விப்பட்டேன் என கூறியுள்ளார்.
அதன் பின்னர் அட்லீ அந்த குறும்பட இயக்குனரின் கதையை கேட்டு விட்டு இதையெல்லாம் பெரியதாக்காதீர்கள். நானே உங்களுக்கு பட வாய்ப்பை வாங்கி தருகிறேன் என கூறி அந்த இயக்குனர் வாயய் அடைத்ததாக தகவல் .

இந்த தகவல் தெரிந்தவுடன் மற்ற நடிகர்களின் ரசிகர்கல் அட்லீயை கலாய்த்து (இதுவும்  சுட்ட கதையா?) என்று விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த தளபதி ரசிகர்கள் அட்லீக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். 

சர்க்கார் சர்ச்சையின் போது இயக்குநர் முருகதாஸ் இணையதள சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய அவர், “நடிகர் விஜய்யுடன் அட்லி உள்ளிட்ட எந்த இயக்குநர் பணியாற்றினாலும் பிரச்னை வருவது இயல்புதான் என்று கூறியது குறிப்பிடத்தக்கது .  

அட்லீ சார் எந்த பிரச்சனையாக இருந்தாலும் இப்பயே பைசல் பண்ணிடுங்க சார்.... பின்னடி பாதிப்பு  அதிகமாயிடும் சார் ....

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area