இந்தியன் 2 படத்தில் அக்சய்குமாருக்கு பதில் அபிஷேக்பச்சனா?


22 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கமலை வைத்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படத்தை இயக்குகிறார் ஷங்கர். 2.0 படத்தைப் போலவே இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க, சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படிப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. பொங்கல் தினத்தன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு கமல் ரசிகர்களை குஷியாக்கினார் ஷங்கர்
கமல் ஹாசனுக்கு பேரனாக சிம்பு நடிக்கிறார் என்று கூறப்பட்ட நிலையில், தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சம்பள பிரச்சனை தொடர்பாக அவருக்குப் பதிலாக சித்தார்த் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. 

இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க '2.0' படத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அக்சய்குமாரிடம் பேச்சுவார்த்தை நடந்தது. ஆனால் இந்த படத்தில் நடிக்க அக்சய்குமார் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது புதிதாக கிடைத்த தகவலின் படி அந்த கேரக்டரில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக்பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாலிவுட் திரையுலக வட்டாரங்களில் செய்தி கசிந்துள்ளது. இந்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, இருப்பினும் இதுகுறித்த ஹேஷ்டேக் ஒன்று டுவிட்டரில் டிரெண்டிங் ஆகிவிட்டது. 

அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்...

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area