பிகில் படத்தின் வசூல் பாதிப்பு !அச்சத்தில் விநியோகிஸ்தர்கள்.



தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் பிகில். அட்லீ இயக்கத்தில் இப்படம் கடந்த தீபாவளி ரிலீசாக வெளியாகி விஜய்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது, என்றாலும் விமர்சனரீதியாக படம் 
அவ்வளவு பெரிதாக பேசப்படவில்லை.

அப்படியான நிலையில் நேற்று போதுமான கூட்டம் இல்லாததால் சென்னையில் உள்ள தேவி தியேட்டரில் பிகில் திரைப்படத்தின் காட்சி ரத்து செய்யப்பட்டதாக தகவல் ஒன்று வைரலானது.

இன்றும் சில மாவட்டங்களில் காலை கட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளது.

முதல் மூன்று நாட்கள் மட்டுமே படத்தின் வசூலுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருந்தது. ஆனால் அதன் பின்னர் வேலை நாட்கள் தொடங்கி விட்டதால் பிகில் வசூல் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

நேற்று மொத்தமாக பிகில் திரைப்படம் 2 அல்லது 3 கோடி தான் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. 

இதனால் எதிர்பார்த்த ஷேர் கிடைக்குமா? கிடைக்காதா? என அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் விநியோகிஸ்தர்கள். ஆனால் இதை பற்றி எதையும் கருத்தில் 
கொள்ளாமல் டிரேட் வல்லுநர்கள் படத்தின் வாசல் 150 கோடி ,200 கோடி என்று 
கயிறு திரித்து வருகின்றனர் இதனால் யாருக்கு லாபம் ? 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area