விஜய் சேதுபதியின் "800" படத்தில் நடிக்கும் சச்சின் டெண்டுல்கர்!

August 01, 2019

விஜய் சேதுபதி, தற்போது கடைசி விவசாயி, சங்கத் தமிழன், லாபம், சைரா நரசிம்ம ரெட்டி, மாமனிதன், என தமிழ் மொழியை தாண்டி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகிறார். விரைவில் இவர் நடித்த 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதற்கு அடுத்து இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். டெஸ்ட் அரங்கில் முதன் முறையாக 800 விக்கெட்டுகளை கைப்பற்றியவர் முரளிதரன். இதனால் இந்த படத்திற்கு 800 என பெயரிடப்பட்டுள்ளது.இந்த படத்தை இயக்குனர் எம் எஸ் ஸ்ரீபதி எழுதி இயக்குகிறார்.
இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், அவருடைய கதாபாத்திரத்திலேயே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முத்தையா முரளிதரனும் சச்சினும் மைதானத்தையும் தாண்டி நெருக்கமான நண்பர்கள் என்றும், இவர்களது நட்பு மற்றும் களத்தில் ஏற்பட்ட போட்டிகள் ,  குறித்த சில காட்சிகள் இப்படத்தில் இடம்பெற உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என்றும்,  இந்தப் படத்தை பிரபல நடிகர் ராணா டகுபதி மற்றும் சுரேஷ் ப்ரோடுக்ஷன்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளது.  தற்போது இந்த படத்தில் நடிக்க உள்ள நடிகர் நடிகைகளின் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »