தளபதி விஜய்யின் 64-வது படத்தில் வில்லன் யார்?


தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பிகில் படம் தீபாவளி தினத்தன்று  வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தளபதி விஜய்யின்  64-வது படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இதனை தொடர்ந்து அந்த படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்களின் தேர்வு தொடங்கி உள்ளது. கதாநாயகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹீரோவிற்கு பிறகு முக்கியமான கதாபாத்திரம் வில்லன். அந்த வில்லன் கதாபாத்திரத்தில் விஜயை எதிர்கொள்ள நடிகர் தேர்வு நடைபெறுகிறது.

அந்த பாத்திரத்தில் நடிக்க KGF பட நாயகன் யாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். அவர் சம்மதம் தெரிவித்தால் நிச்சயம் படம் மிக பிரமாண்டமாக இருக்கும். 

யாஷ் சம்மதிக்காத நிலையில் அந்த படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை காத்திருப்போம்... 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area