"விக்ரம் 58" படத்துல 25 கெட் அப்ல நடிக்கிறாராம் நம்ம சீயான்!

July 29, 2019

நடிகர் சீயான் விக்ரம் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

'டிமான்டி காலனி', 'இமைக்கா நொடிகள்' ஆகிய படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து அடுத்தபடியாக சீயான் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். இது நடிகர் விக்ரமின் 58-வது படம் ஆகும். இந்த படத்தை  செவன் ஸ்கிரீன் மற்றும் வியாகாம் 18 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.தற்போது இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கான கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க  மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறதாம்.'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடித்த அனுராக் காஷ்யப் இந்தப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்.இந்தப்படத்தின் இன்னொரு சிறப்பு, நாயகன் சீயான் விக்ரம் 25 கெட்டப்களில் நடிக்கவிருக்கிறாராம்.ஒவ்வொரு தோற்றத்திற்கும் பெரிய வித்தியாசம் காட்டவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.அதற்கான முன் தயாரிப்புப் பணிகள் வேகமாக நடந்துவருகிறதாம். 


விக்ரம் இதற்கு முன் ’ராஜபாட்டை’ படத்தில் ஒரு பாடலுக்காக மட்டும்  7 கெட்டப்களில் நடித்திருந்தார். ஷங்கரின் அந்நியன் மற்றும் ஐ படத்துக்கு  பிறகு இருமுகன் படத்தில் 2 கெட்டப்களில் நடித்திருந்தார் இந்த மூன்று படங்களும் வசூல் ரீதியாகவும் ,விமர்சன ரீதியாகவும்  மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது ,இறுதியாக கடந்த வாரம் வெளிவந்த கடாரம் கொண்டான் மாபெரும் வெற்றியடைந்து முதல் வார முடிவிலேயே உலகமுழுவதும் 90 கோடி வரை வசூல்செய்துள்ளது.இப்போது இருபத்தைந்து கெட்டப் என்றால் அது உலகில் இதுவரை யாரும் செய்யாத சாதனையாக இருக்கும். 

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »