#1 ட்ரெண்டிங்கில் காப்பான் ! இணையத்தை கலக்கிய சூர்யா ரசிகர்கள்!


கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் காப்பான் இப்படத்தின் டீசர் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக நேற்று வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த படத்தில் நடிகர் மோஹன்ளலாலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த டீசர் வெளியான சில மணிநேரத்திற்குள்ளாகவே 2 மில்லியன் பார்வையாளர்கள் என்ற எண்ணிக்கையை அடைந்தது. இன்றைய நிலவரப்படி ஏறக்குறைய மூன்று 4 மில்லியனை தொடப்போகிறது.அது மட்டும்மல்லாமல் இந்த டீசருக்கு  300K லைக்குகளும் கிடைத்துள்ளது 


டீசரை முழுவதையும்  பார்க்கும் போது விவசாயி சூர்யா, முஸ்லிம் கெட் அப் சூர்யா, அதிகாரி லுக் சூர்யா, தீவிரவாதி சூர்யா, நார்த் இண்டியன் லுக் சூர்யா என ஏறக்குறைய ஐந்திற்கும் மேற்பட்ட விதவிதமான தோற்றங்களில் டீசர் முழுவதையும் ஆகிரமித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில்  நட்சத்திரப்படலாம்  கொஞ்சம் பிரம்மாண்டமாகவே உள்ளது. இந்நிலையில் இதே வேகத்தில் இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்துள்ளனர்.அதாவது காப்பான் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 30-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.மே இறுதியில் என்.ஜி.கே வெளியாகவுள்ள நிலையில் அடுத்த இரு மாதங்களில் காப்பான் வெளியாகும் என படக்குழு கூறியுள்ளதால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர்..


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area