அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் இயக்குனர் ! எதிர்ப்பு தெரிவிக்கும் ரசிகர்கள்.

March 17, 2019

வா தலைவா.. தமிழகத்தில் நல்ல மாற்றத்தை கொடுக்க உன்னால் மட்டும் தான் முடியும் என பிரபல இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.

தல அஜித் நடிப்பது மட்டுமே என்னுடைய வேலை.. அரசியலைபொறுத்தவரை தவறாமல் வாக்களிப்பதே என்னுடைய பொதுஜன கடமை.என் பெயரையும் என்னுடைய ரசிகர்கள் பெயரையும் அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம் என அறிக்கை மூலம் தெளிவாக கூறியிருந்தார்.


இந்நிலையில் தற்போது பிரபல இயக்குநரான சுசீந்திரன், தமிழகத்தில் 40 ஆண்டு கால திராவிட ஆட்சியை மாற்றி நல்ல மாற்றத்தை உங்களால் மட்டும் தான் கொடுக்க முடியும். இது தான் 100 % சரியான தருணம். வா தலைவா என குறிப்பிட்டுள்ளார்.சுசீந்திரன் இந்த ட்வீட் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் வேணாம்.. எங்களுக்கு இதுவே போதும் என சுசீந்திரன் டீவீட்டிற்கு அஜித் ரசிகர்கள் ரியாக்ட் செய்து வருகின்றனர்.இதனையடுத்து அஜித் ரசிகரகள் எங்களுக்கு அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என ட்விட்டரில் ஹேஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »