"கடாரம் கொண்டான்" பற்றி ராஜேஷ் எம் செல்வா கூறிய புதிய தகவல் !!


தூங்காவனம்’ படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் இயக்குநர் ராஜேஷ் எம் செல்வா, விக்ரமை வைத்து `கடாரம் கொண்டான்’ படத்தை எடுத்திருக்கிறார்.ராஜேஷ் எம் செல்வா டப்பிங் வேலைகளில் பிஸியாக இருந்தபோது விகடன் நிருபர் மா.பாண்டியராஜன் அவரை சந்தித்துப் பேசிய   ஒரு சில தகவல்கள் இதோ . 

இது சந்திரஹாசன் சாரோட டிரீம் புராஜெக்ட். `தூங்காவனம்’ படம் முடிஞ்சதுக்கு அப்புறம் உடனடியா எனக்கு இந்தப் பட வாய்ப்பைக் கொடுத்தாங்க. முதலில் கமல் சாரை ஹீரோவா வெச்சு ஆரம்பிக்க வேண்டியது.  சில காரணங்கள், கமல் சார் அரசியலில் இறங்கியது ஆகியவற்றால் அது நிறைவேறலை. நானும் சந்திரஹாசன் சாரும் சேர்ந்துதான் விக்ரம் சாரை நடிக்க வைக்கலாம்னு முடிவு பண்ணினோம். ராஜ்கமல் ஃபிலிம்ஸில் கமல் சாரைத் தவிர வெளியில இருந்து நடிச்ச ஹீரோக்களில் விக்ரம் சார் நாலாவது ஆள். இதுக்கு முன்னாடி நாசர் சார், சத்யராஜ் சார், மாதவன் நடிச்சிருக்காங்க. 


விக்ரம் சாரை நடிக்க வைக்கலாம்னு சொன்னதும், ஒரே ஒரு கண்டிஷனை மட்டும் கமல் சார் சொன்னார். ‘இது கமல்ஹாசன் தயாரிக்கிற படம்கிறதனால எந்த அட்வான்டேஜும் எடுத்துக்காம, விக்ரம்கிட்ட முறைப்படி அப்ரோச் பண்ணுங்க’ன்னு சொன்னார். அதுக்கப்புறம் நான் விக்ரம் சாரிடம் கதை சொன்னதும் அவருக்குக் கதையும் பிடித்தது. கமல் சார் நடிக்க வேண்டிய கேரக்டர் என்ற காரணமும் பிடித்தது.’’

முதல் நாள் ஷூட்டிங்கிலிருந்து இன்னைக்கு என்ன சீன் டப்பிங் போகுதுங்கிற வரைக்கும் அவருக்கு அப்டேட் போயிடும். எல்லாமே மெயில் கம்யூனிகேசன்தான். அவர் அந்த மெயில் எல்லாம் பார்க்க மாட்டார்னு நாம நினைக்கவே முடியாது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கிற எந்தப் படமும் ஒரு நாளுக்கு 10 மணி நேரத்துக்கு மேல ஷூட் பண்ணக்கூடாதுங்கிறது கமல் சாரோட ரூல். ஆனால், இந்தப் படத்துக்கு ஒரு நாள் 15 மணி நேரம் ஷூட் பண்ணினோம். மெயில்ல பார்த்துட்டு போன் பண்ணினார். `ஏன் ராஜேஷ் 15 மணி நேரம் ஷூட் பண்றீங்க? நடிக்கிறவங்களுக்கும் ப்ரஷர்; டெக்னீஷியன்ஸும் டயர்டு ஆகிடுவாங்கல்ல’ன்னு கேட்டார். `இல்ல சார், ஒரு நாள் மட்டும் அவ்வளவு நேரம் போயிடுச்சு. இனிமேல் அப்படிப் போகாம பார்த்துக்கிறேன்’னு சொன்னேன். எவ்வளவு பிஸியா இருந்தாலும், எல்லா விஷயத்தைப் பற்றியும் தெரிஞ்சுப்பார்.’’
Kadaram Kondan New Still
விக்ரமுடன் பணிசெய்த அனுபவம்..?
“நாம ஒரு சீனைச் சொல்லும்போதே அவருக்குத் தெரிஞ்சிடும், இதில் என்ன பண்ணணும்னு.  அதுமட்டுமல்லாம ராஜ்கமல் ஃபிலிம்ஸோட வொர்க்கிங் ஸ்டைலே வேற. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடி முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறவங்களை ஒண்ணா வெச்சு ஒரு முறை கதை சொல்லுவோம். அப்போ அவங்களுக்கு எதாவது சந்தேகம் வந்தா கேட்பாங்க. விக்ரம் சார் இதுக்கு ஓகே சொல்லுவாரான்னு தெரியலைன்னு அவரோட வொர்க்கிங் ஸ்டைல் எப்படியிருக்கும்னு டைரக்டர் விஜய்கிட்ட கேட்டேன். அவர் பாசிட்டிவ்வா நிறைய விஷயங்கள் சொன்னார். அவர் சொன்னதைவிட, பழகுறதுக்கு ரொம்பவே எளிமையான மனிதரா இருந்தார். எல்லா டிஸ்கஷனுக்கும் வந்தார். ஸ்க்ரிப்ட்டுக்காக அவர் சில விஷயங்கள் மெனக்கெட்டார். படம் முழுக்க அவர் செம ஸ்டைலிஷா இருப்பார்.’’

படத்தில் விக்ரமுக்கும் அக்‌ஷராவுக்கும் என்ன உறவு?
``இரண்டு வெவ்வேறு தளங்களில் இருக்கிற விக்ரமுக்கும் அக்‌ஷராவுக்கும் நடக்கிற ஒரு சம்பவத்தால இந்த ரெண்டு பேரோட வாழ்க்கையும் அவங்களுக்குப் பிடிக்காமலே ஒண்ணாகிடுது. அதுக்கப்புறம் அந்த வாழ்க்கையையிலேயே அவங்க தொடர்ந்து போறாங்களா, இல்ல வெளியில வராங்களா என்பதுதான் கதை. 


அக்‌ஷராவுக்கு ஜோடியா நாசர் சாரோட பையன் அபி நடிச்சிருக்கார். முதலில் இந்த ரோலுக்காக நாங்க பல பேரை ஆடிஷன் பண்ணினோம். வெளி மாநிலங்களில் இருந்தெல்லாம் ஆள்களை வரவெச்சு ஆடிஷன் பண்ணினோம். யாருமே செட்டாகலை. ஒரு நாள் கமல் சார், ‘நம்ம நாசரோட பையன் அபி இந்தக் கேரக்டருக்கு செட் ஆவார்னு தோணுது. ஆடிஷன் பண்ணிப் பார்’னு சொன்னார். அப்புறம் அவரை வெச்சு ஒரு வாரம் ஆடிஷன் பண்ணினோம். அப்புறம் ஒரு வொர்க் ஷாப் வெச்சு அவரை நடிக்க வெச்சோம்.’’ 

செய்தி  தகவல் : ஆனந்த விகடன் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area