ட்ரென்ட் அடித்து இணையத்தை அதிரவைத்த சூர்யா ரசிகர்கள்.

January 01, 2019

கே .வி ஆனந்த் ,சூர்யா இணையும் மூன்றாவது படம் 'சூர்யா 37' இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் தலைப்பு இன்று அதிகாலை புது வருடம் பிறந்த பத்து நிமிடத்தில் அதாவது 12.10am மணிக்கு வெளியானது. வெளியான சிலநிமிடங்களில் படத்தின் தலைப்பு ட்விட்டர் தலத்தில் உலக  அளவில் ட்ரெண்ட் ஆனது.

இந்த படத்திற்கு 'மீட்பான்', 'காப்பான்' மற்றும் 'உயிர்கா' ஆகிய மூன்று டைட்டில்கள் தேர்வு செய்யப்பட்டு ரசிகர்களிடம் கருத்து கேட்கப்பட்ட நிலையில் பெரும்பாலான ரசிகர்கள் 'உயிர்கா' என்ற டைட்டிலை தேர்வு செய்தனர். ஆனால் படக்குழுவினர் இந்த படத்திற்கு 'காப்பான்' என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளது ஆச்சரியத்தை அளிக்கின்றது.  


இந்த படத்தில் பிரதமர் கதாப்பாத்திரத்தில் நடிக்கும் மோகன்லாலை பாதுகாக்கும் கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்து வருவதால் இந்த படத்திற்கு 'காப்பான்' என்ற டைட்டிலை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர்.


இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இந்த படத்தில் சூர்யாவுடன் , மோகன்லால், சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். லைகாவின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Poster Design : Fans Express

Share More:

Share This Post:

India - Politics, Elections, Current Affairs, Crime, Business, Sports And Entertainment - Fans Express www.fansexpress.in

Related Articles

Previous
Next Post »