சூர்யா நடித்த 'NGK' மற்றும் விக்ரம் நடித்த 'கடாரம் கொண்டான்'ஆகிய இரு படங்களும் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தில் வெளிவருவதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாமி ஸ்கொயர் படத்தை அடுத்து நடிகர் விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். இந்தப் படத்தில் விக்ரம் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் மற்றும் பூஜா குமார் நடிக்கிறர்கள்.
இந்தப் படத்தை தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார்.கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட்லுக் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது .இந்த படத்தின் பெயர் மற்றும் விக்ரமின் பெயர் ட்விட்டர் தலத்தில் 8 மணி நேரம் ட்ரெண்டிங்கில் இருந்தது குறிப்பிடத்தக்கது.இந்த படத்தின் டீஸர் வரும் பொங்கல் அன்று பொங்கல் விருந்தாக வெளிவரவுள்ளது.
அடுத்தது சூர்யா நடிக்கும் 'NGK' இந்த படம் தீபாவளிக்கே வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது அனால் தமிழ் புத்தாண்டு விருந்தாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகின்றனர். செல்வராகவன் படம் என்றாலே எதிர்பார்ப்பு அதிகம் இருக்கும் அதோடு அவருடன் சூர்யா இணைந்தால் கேட்கவா வேண்டும் . எதிர்பார்ப்பு எகிறியுள்ளது!!!
ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று இவர்கள் இருவரின் படமும் ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சூர்யா மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்குமே பள்ளி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிகம் ரசிகர்களாக இருக்கும் நிலையில் இந்த புத்தாண்டு கோலாகலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரின் படம் ஒரே நாளில் வெளியானால் யார் படம் வெற்றியடையும் என்று உங்கள் கருத்தை Comment செய்யவும் .
8 comments
Write commentsNGK da
ReplyChiyaaan
ReplyChiyaan
Replyசீயான் vikrammnmm
ReplyChiyan vikram
ReplyKK Chiyaan da....
ReplyChiyaan KK
ReplyNgk daw
ReplyEmoticonEmoticon